

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைப்பதில் திமுகவை தேமுதிக பின்னுக்குத் தள்ளியது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்ற உறுதி அவர்களது செயல்பாட்டில் தெரிந்தது.
துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற் றுவதற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், கடந்த ஜூலை 10-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 12 (செவ்வாய்க்கிழமை) வரை 22 நாட்கள் பேரவை நடந்தது.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுப்பி னர்கள், அவைக்கு 10 நாட்கள் மட்டுமே வந்தனர். அதிலும் ஒருசில நாட்களே அவை நிகழ்ச்சிகளில் முழுமையாக பங்கேற்றனர்.
மற்ற நாட்களில் ஆளுங்கட்சியுடன் ஏற்பட்ட மோதலாலும், பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறியும் வெளிநடப்பு செய்தனர்.
அதுமட்டுமின்றி அமளியில் ஈடுபட் டதாக பேரவைத் தலை வரால் 4 முறை வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரையும் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பேரவைத் தலைவர் நிராகரித்தார். அதனால், திமுகவினர் தொடர்ந்து கூட்டத் தொடரில் பங்கேற்கவில்லை. வெளிநடப்பு, வெளியேற்றம் போன்ற காரணங்களால் தொகுதிப் பிரச்சினைகளைப் பற்றி பேசுவ தற்கான வாய்ப்பை திமுக தவறவிட்டுவிட்டது. கிடைத்த வாய்ப்பை வீணடித்துவிட்டனர் என்றே அவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் கருதக்கூடும்.
பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தேமுதி கவோ, கடும் வாக்குவாதங் களில் ஈடுபட்டாலும் அவை நடவடிக்கைகளில் முழுமையாக பங்கேற்றனர். திமுகவைவிட அதிகம் விமர்சிக்கப்பட்டது தேமு திகதான்.
அதற்கு தேமுதிக உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், விவா தங்களில் பங்கேற்க தவறவில்லை. பொறுமை இழக் காமல் அவை முடியும் வரை அமர்ந்திருந்து மக்கள் பிரச்சினை களைப் பற்றி பேசினர். வாய்ப்பு கிடைத்தபோது, ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டினர்.
அதேபோல இடதுசாரிகளும் அரசை பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டி, குறைகளையும் சுட்டிக்காட்டினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, மமக உறுப்பினர்களும் சில நாட்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் அரசை விமர்சித்துக் கொண்டி ருந்தாலும் பல்வேறு துறைகளின் சார்பில் புதுப்புது திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துக் கொண்டே இருந்தார். அரசு கேபிள் மூலம் இன்டர்நெட் வசதி, அம்மா மக்கள் சேவை மையம், புதிய வேளாண் கல்லூரிகள், மீனவர்களுக்கு நிவாரணம் அதிகரிப்பு, புதிதாக 1,200 பஸ்கள், ரூ.670 கோடியில் புதிய அணைகள், கால்வாய் சீரமைப்பு, ரூ.2,300 கோடியில் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அமைச்சர்களும் தங்கள் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
மேலும், வேட்டிக்கு தடை விதித்தால் ஓராண்டு சிறை, அனுமதியின்றி ஆழ்துளை கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உள்பட பல சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன.
மொத்தத்தில் காரசார விவாதங்கள், கருத்து மோதல்கள் என இந்தக் கூட்டத் தொடர் பரபரப்பாகவே இருந்தது.