

சென்னை
இயற்கை சீற்றத்தின்போது மின் தடை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் பூமிக்கு அடியில் நவீன தொழில் நுட்பத்துடன்கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
நம் நாட்டில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அவ்வப் போது புயல், கனமழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் உயிர் இழப்புகள் ஏற்படுவதும், விவசாய நிலங்கள், பயிர்கள், தென்னை, வாழை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள், வீடுகள், கடைகள், மீன்பிடி படகுகள் போன்றவை பலத்த சேதமடைவதும் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கின் றன.
இயற்கை சீற்றத்தின்போது ஏற்படும் பாதிப்புகளில் குறிப்பாக மின் தடை, தகவல் தொடர்பு துண் டிப்பைத் தவிர்ப்பதற்கு பூமிக்கு அடியில் நவீன தொழில்நுட்பத் துடன்கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இயற்கைச் சீற்றத்தால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை கவனத் தில் கொண்டு அதற்கெல்லாம் என்னென்ன முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடுகளை நவீன தொழில்நுட்பத்தில் செய்யலாம் என்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, உரிய தீர்வு காண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இயற்கை சீற்றத்தின் பெரும் பாதிப்பில் இருந்து மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும். இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.