

சுதந்திர தினத்தையொட்டி கோட்டை வாயிலில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளுடன் கூடிய செயற்கை தென்னை மரங்களை வியாழனன்று போலீஸார் கருவிகளை வைத்து சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, நுழைவாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த ஒரு மரத்தினுள்ளே இருந்து வினோத ஓசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸார் வந்து சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸார் சோதனையிட்டதால் செயற்கை தென்னை மரத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளி பரவியது. ஆனால் செயற்கை தென்னை மரத்தில் எதுவும் சிக்கவில்லை.