

சென்னை மாநகராட்சி அலு வலர்களில் பலர் இதயநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 40 வயதைக் கடந்த பெரும்பாலானோர் இதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மாநகராட்சியில் அலுவலர்கள் பற்றாக்குறை, வேலைப் பளு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவும் மாதங்களில் இவர்கள் காலை முதல் இரவு வரை ஓய்வின்றி வேலை செய்கின்றனர்.
மேலும் பேரிடர் காலங்களில் 24 மணி நேரமும், வார விடுமுறை, விழாக்கால விடுமுறையின்றி பணியாற்றுகின்றனர். தொடர் பணி, வேலை பளு காரணமாக மாநகராட்சி அலுவலர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு கூட சுகாதார ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், மாநகராட்சி அலு வலர்கள், துப்புரவு பணியாளர் கள் மற்றும் கீழ்நிலைப் பணி யாலர்கள் அனைவருக்கும் ஆண்டு தோறும் இலவசமாக முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அலு வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த மாதம்கூட, வனத்துறையில் உள்ள 30 வயதைக் கடந்த அனைத்து பணியாளர்களும், அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்துக்கொள்வதை கட்டாய மாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போன்று மாநகராட்சி ஊழியர்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “அது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.தொடர் பணி, வேலை பளு காரணமாக மாநகராட்சி அலுவலர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.