எல்லை பிரச்சினையால் கொத்தங்குடி கிராமத்தில் நிவாரண பணிகள் பாதிப்பு ஒரு வேளை மட்டும் உணவு வழங்குவதாக புகார்

எல்லை பிரச்சினையால் கொத்தங்குடி கிராமத்தில் நிவாரண பணிகள் பாதிப்பு
ஒரு வேளை மட்டும் உணவு வழங்குவதாக புகார்
Updated on
1 min read

திருவாரூர்

திருவாரூர்- திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது கொத்தங்குடி கிராமம். இது நாகை மாவட்டம் தலை ஞாயிறு ஒன்றிய எல்லைக்கு உட் பட்டது. திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு செல்லும் சாலையின் இடைப்பட்ட பகுதியில் இந்த கிராமம் உள்ளது. இச் சாலை வழியே செல்பவர்கள் இந் தப் பகுதியை திருவாரூர் மாவட் டம் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில் அது, நாகை மாவட் டத்தைச் சேர்ந்த பகுதியாகும்.

இந்நிலையில், புயல் தாக்கி யதில் கொத்தங்குடியில் நூற்றுக் கணக்கான தொகுப்பு வீடுகள் மற்றும் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 2 வேளை உணவு வழங்கப்படும் நிலையில், கொத்தங்குடியில் அமைக்கப்பட் டுள்ள நிவாரண முகாமில் ஒரு வேளை மட்டுமே உணவு வழங் கப்படுவதாக குற்றம்சாட்டப்படு கிறது. இதேபோல, நாகை மாவட்டத் தில் இருந்து எந்த ஒரு அதிகாரியும் கணக்கெடுப்பு பணிக்கோ அல்லது மின் கம்பங்கள் சீரமைப்புப் பணிக்கோ வந்து சேரவில்லை என கொத்தங்குடி கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கொத்தங்குடி மக்கள் கூறியது: அருகில் உள்ள கச்சனம் தொடங்கி, திருவாரூர் வரையிலும், ஆலிவலம், மணலி தொடங்கி திருத்துறைப்பூண்டி வரையிலும் திருவாரூர் மாவட்ட எல்லைக்குள் வருவதால் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக சென்றடைகின்றன. குறிப்பாக நிவாரண முகாமில் 2 வேளை உணவு வழங்குகிறார்கள். மின் சீரமைப்புப் பணி நடக்கிறது.

ஆனால், எங்கள் ஊர், நாகை மாவட்டத்தின் கடைகோடியில் உள் ளது. அதனால் அதிகாரிகளுக்கு எங்கள் கிராமத்தின் மீது கவனம் இல்லை. இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. நிவாரண முகாம் மட்டும் திறந் திருந்தாலும் ஒரு வேளை உணவு மட்டுமே தருகிறார்கள். பெரும்பா லான வீடுகள் சேதமடைந்துள்ளன. 5 வீடுகள் முற்றிலும் இடிந்து விட் டன. எனவே, கொத்தங்குடி கிராம மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற நிர்வாக சீர்கேடு களை தவிர்க்க எதிர்காலத் தில் கொத்தங்குடி கிராமத்தை திருவாரூர் மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in