Published : 23 Nov 2018 09:39 AM
Last Updated : 23 Nov 2018 09:39 AM

புயல் பாதித்த பகுதிகளுக்கு தென்னை நாற்று

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நெற்பயிர்,  தென்னை நாற்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: சுமார் 1 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை துல்லியமாக மதிப்பீடு செய்யும். பொருத்தமான திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுத்து, மறுசீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள், வேளாண் உள்ளிட்ட பிற துறைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.

நெற்பயிர் மற்றும் 31 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்துள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் மீண்டும் நெற்பயிர் சாகுபடி செய்வதற்கும், அதற்குத் தேவையான நாற்று களைப் பெற்றுத் தருவதற்கும் வேளாண்மை பல்கலைக்கழகம் துணை நிற் கும். சாய்ந்த தென்னை மரங்களில் 3 வயதுக்கு உட்பட்ட தென்னை மரங் களை, மீண்டும் நட்டு வைத்து வளர்க்க முடியும். பல ஆண்டுகள் ஆன மரங் களை மீண்டும் வளர்க்க இயலாது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தோட்டக் கலை துறை மூலமாக தென்னை நாற்றுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 31 லட்சம் தென்னை நாற்றுகளுக்குப் பதிலாக புதிய மரக் கன்றுகளை நடவு செய்ய 3 ஆண்டுகள் தேவைப்படலாம். தென்னை விவசா யத்தில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், வருங்காலங்களில் பாதிப்புகளில் இருந்து மரங்களைப் பாதுகாக்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x