Published : 29 Nov 2018 08:27 AM
Last Updated : 29 Nov 2018 08:27 AM

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்: பாதிப்புகளை பார்வையிட்ட பின்பு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மனசாட்சிப்படி நிதி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார். இவ்விரு மாவட்டங்களிலும் புயல் பாதிப்புகளை நேற்று பார்வையிட்ட பின்னர் இதைக் கூறினார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்த தமிழக முதல்வர் கே.பழனி சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் 10 கிலோ அரிசி, 1 கிலோ பால் பவுடர், 2 கிலோ துவரம் பருப்பு, 2 வேட்டி- சேலை, 1 போர்வை என 27 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பைகளை வழங்கினர். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். மின் சீரமைப்பு பணியின்போது உயி ரிழந்த மின்வாரிய ஊழியர் சண்மு கத்தின் மனைவி வனிதாவுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினர்.

முன்னதாக, மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட் டிருந்த புயல் பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை தமிழக முதல் வரும் துணை முதல்வரும் பார்வையிட்டனர்.

பின்னர் செல்லூர் கிழக்கு கடற் கரைச் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் சேமித்து வைக்கப் பட்டிருந்த நிவாரணப் பொருட் களையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, விழுந்தமாவடி கிராமத்துக்குச் சென்ற முதல்வர் பழனிசாமி, பொதுமக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட கைப்பம்புகளை திறந்து வைத்தார். இதையடுத்து கடற்கரைப் பகுதியில் புயலால் இழுத்துச் செல்லப்பட்டு பழுத டைந்த நிலையில் உள்ள படகு களைப் பார்வையிட்டார்.

கூடுதல் இழப்பீடு

பின்னர், பொதுமக்களிடம் பேசியபோது, "அதிகாரிகளின் கணக்கெடுப்பு பணி முடிவடைந்த வுடன் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதலாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. பாதிக்கப்பட்ட அனைவருக் கும் நிவாரணம் வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்" என்றார்.

பின்னர், புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை தற்காலிகமாக பாதுகாக்கும் வகையிலான தார்ப் பாய்களை முதல்வரும் துணை முதல்வரும் வழங்கினர்.

கோவில்பத்து கிராமத்தில் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் சுமார் ரூ.152 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே பெரிய சேமிப்புக் கிடங்கின் 43 கட்டிடங்கள் புய லால் உருக்குலைந்திருப்பதை பார்வையிட்டனர்.

பின்னர் புஷ்பவனம் கிராமத்தில் கடலில் இருந்து கரைப் பகுதிக்கு தள்ளப்பட்டுள்ள சேற்றைப் பார்வை யிட்டனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்டத்தில் திருத் துறைப்பூண்டியை அடுத்துள்ள மேலமருதூர் கிராமத்தில் பாதிக்கப் பட்ட பகுதிகளை முதல்வரும் துணை முதல்வரும் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், மணலி கிராமத்தில் முருகேசன் என்பவரது சம்பா நெல் வயலை பார்வையிட்டபோது, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் உள்ளிட்ட விவ சாயிகள், கஜா புயலால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தெரிவித்தனர்.

மனசாட்சிப்படி தர வேண்டும்

நாகை, திருவாரூர் மாவட்டங் களில் கஜா புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளை நேற்று பார்வை யிட்ட பின்னர், முதல்வர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கஜா புயலால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் 22,274 வீடுகள் பகுதி அளவும் 77,896 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள் ளன. திருவாரூர் மாவட்டத்தில் 72,335 வீடுகள் பகுதி அளவும் 58,394 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. எனவே, நாகை மாவட்டத்தில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகளும் திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகளும் என 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

நிவாரணம் இன்னும் 5 நாட் களில் முழுமையாக வழங்கப்படும். மத்திய அரசு மனசாட்சிப்படி, மனித நேயப்படி நிதி உதவி வழங்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் சென்னை திரும்பினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x