Published : 25 Nov 2018 10:56 AM
Last Updated : 25 Nov 2018 10:56 AM

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குப்பைகளை அகற்றும் பணி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

புயலால் பாதிக்கப்பட்ட நாகை ஒன்றி யம் தென்கால் ஒரத்தூர் கிராமத் தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் துப்புரவுப் பணிகளை நேற்று ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் பாதிப்புகள் பெருமளவில் சீரமைக்கப்பட்டு விட்ட நிலையில், துப்புரவுப் பணிகளைச் செய்ய, பிற மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர்கள், ஊராட்சித் துறை பொறியா ளர்கள், உதவி இயக்குநர்கள், வட் டார வளர்ச்சி அலுவலகள் என 90 அலுவலர்கள், பல்வேறு நிலையில் உள்ள 360 ஊழியர்கள் பணி அமர்த் தப்பட்டுள்ளனர். இவர்கள், ஊரகப் பகுதிகளில் சாய்ந்துள்ள மரங்கள் மற்றும் குப்பையை அகற்றுவது, தேவைப்படும் இடங்களில் குடிநீர் வழங்குவது ஆகிய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நாகை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியிலுள்ள 33,400 பொதுமக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணிகளை ஒருங்கிணைக் கவும், அலுவலர்களுக்கு தேவை யான உதவிகளை உடனுக்குடன் செய்யவும் ஏதுவாக அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கி ணைத்து 14 குழுக்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மின்சாரம் தடைபட்ட பகுதிகளில் தற்போது மின்சாரம், குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x