துப்புரவு தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சென்னை முழுவதும் குப்பைகள் தேங்கும் அபாயம்

துப்புரவு தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சென்னை முழுவதும் குப்பைகள் தேங்கும் அபாயம்
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, மாநகராட்சி தொழிலாளர்கள் இன்று முதல் காவலரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் மாநகரம் முழுவதும் துப்புரவு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சீனிவாசலு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் அடையாறு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்ட லங்களில் மேற்கொள்ளப்படும் துப்புரவு பணிகள் ஏற்கெனவே தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. துப்புரவு பணியை ஒப்பந்த முறையில் மேற்கொள்ள, ஒப்பந்ததாரராக வருபவர், நகரத்தின் தூய்மை, சுகாதாரம் குறித்து கவலைப்படுவதில்லை. தேவையான பணியாளர்களை நியமித்து, சட்டப்படியான ஊதியத்தை வழங்க குப்பை களை முறையாக அகற்ற முற்படுவதில்லை. பிரதான சாலைகளில் மட்டும் முறையாக குப்பைகள் அள்ளப்படுகிறது. உட்புற தெருக்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் பார்ப்பது மட்டுமே குறிக்கோளாக உள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மாநகரம் முழுவதும் குப்பைகளை அகற்றும் பணியை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் சென்னை மோசமான நிலைக்கு செல்லும். இது ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் நடவடிக்கையாகும்.

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் இல்லை. அதனால் நாளை (நவ.27) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத் தில் ஈடுபட இருக்கிறோம். மாநக ராட்சியில் உள்ள 7 முக்கிய துறைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அதன் காரணமாக மாநகராட்சி துப்புரவு பணி, பூங்கா பராமரிப்பு, சாலை பராமரிப்பு, தெரு விளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in