

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் ‘பிரைம் சிருஷ்டி' என்ற நிறுவனம் கட்டி வந்த 11 மாடி கட்டிடம் ஜூலை 28-ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் சிக்கி 61 பேர் பலியானார்கள். 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக, கட்டிட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்துகாமாட்சி மற்றும் கட்டிட வடிவமைப்பாளர் விஜய் பர்கோத்ரா, பொறியாளர்கள் வெங்கட சுப்ரமணி, சங்கர் ராமகிருஷ்ணன், துரைசிங்கம், கார்த்திக், மற்றும் பாலகுருசாமி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்க ளின் நீதிமன்ற காவல் புதன் கிழமையுடன் முடிந்தது. இதை யடுத்து அவர்களை பெரும் புதூர் குற்றவியல் நீதிமன்றத் தில் போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அவர்களின் காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர்களை பாது காப்புடன் சிறைக்கு போலீஸார் அழைத்துச் செல்லப்பட்டனர்.