மத்திய குழு ஆய்வு குறித்து வாசன் அதிருப்தி 

மத்திய குழு ஆய்வு குறித்து வாசன் அதிருப்தி 
Updated on
1 min read

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை கும்பகோணத்தில் இருந்து நேற்று அனுப்பி வைத்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினர் 3 மாவட்டங்களை 3 நாட்களில் ஆய்வு செய்வது என்பது பயனற்றது. மாவட்டத்துக்கு ஒரு குழு என மத்திய அரசு அனுப்பியிருக்க வேண்டும். ஒரு குழுவை அனுப்பி அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்வதில் பலன் இல்லை. மத்திய குழுவின் ஆய்வுப்பணி திருப்திகரமாக இல்லை. புயல் பாதிப்புகளை மத்திய, மாநில அரசுகள் முறையாக கணக்கெடுத்து, மதிப்பிட்டு, நிதியுதவி அளித்து, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களை உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இந்த மாவட்டங்களில் அனைத்து விவசாயிகளின் வங்கிக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மேலும் ஒருவார காலத்துக்கு மூட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் இருந்திருந்தால், சேதங்கள் உடனடியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கும். அங்குள்ள உண்மை நிலவரம் வெளியில் வந்திருக்கும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க, தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in