

சென்னை
தேமுதிக முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் மீதான அவதூறு வழக்கை சென்னை சிறப்பு நீதி மன்றம் விசாரிக்க உயர் நீதிமன் றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு திருப் பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித் தும், அம்மா உணவகம் குறித் தும் அவதூறாக பேசியதாக தேமுதிக முன்னாள் எம்எல்ஏ வும், தற்போதைய திமுக நிர்வாகியுமான சந்திரகுமார் மீது திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப் பட்டது.
இந்த அவதூறு வழக்கு தற்போது எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சந்திரகுமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தற்போது எம்எல்ஏ-வாக இல்லாத தன் மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், மனுதார ரான சந்திரகுமார் மீதான அவ தூறு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.