

தமிழகம் முழுவதும் டிசம்பர் 10-ம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தாம்பரத்தை அடுத்த மாடம் பாக்கத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங் களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண் டனர்.
கூட்டத்தில் தங்களது அலுவல கங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், 2,467 காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆன்லைன் சான்றிதழ் வழங்குவதற்கு போதிய வசதி கள் செய்து தர வேண்டும், தேவைக்கேற்ப மாவட்ட வாரியாக பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
4 கட்ட போராட்டம்
பின்னர் செய்தியாளர்களிடம் மாநில பொதுசெயலாளர் செல்வன் கூறியதாவது:
எங்களது கோரிக் கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம். வருகிற 28-ம் தேதி ஆன்லைன் சான்றிதழ்கள் பரிந்துரைக்காமலும் 5-ம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவல கங்களிலும் முழு இரவு தர்ணா போராட்டம், 7-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உண்ணாவிரத போராட்டம், 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் என 4 கட்ட போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.