

மேடவாக்கம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகரணை அடுத்த மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்தநாள் விழாவையொட்டி அங்குள்ள மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்.
அரசுக்கு கோரிக்கை
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது," தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு நாளான டிசம்பர் 24ம் தேதி அன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கேட்டு கொண்டார்.