

பொறியியல் கல்லூரிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் திட்டமிட்ட படி செமஸ்டர் தேர்வுகள் நடை பெறும் என்றும் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் இன்றும் நாளையும் தேர்வுகள் நடத்தப் படாது என்றும் அண்ணா பல் கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் அதன் துறை கல்லூரிகளில் (கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, எம்ஐடி) தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
கஜா புயல் பாதிப்பு மற்றும் கனமழையைக் கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப ஒருசில தேதிகளில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனினும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்த கல்லூரிகளில் எவ்வித இடையூறும் இல்லாமல் திட்டமிட்டபடி தேர்வுகள் நடை பெற்று வருகின்றன.
இந்த நிலையில், பொறியி யல் தேர்வுகள் இன்று (வியாழக் கிழமை) முதல் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், நாகப் பட்டினம், திருவாரூர், புதுக் கோட்டை ஆகிய. 3 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மட்டும் இன்றும் நாளையும் (வியாழன், வெள்ளி மட்டும்) தேர்வுகள் நடத்தப்படாது என்றும் அத்தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.