

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசன் கூறியதாவது:
தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை யும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.