

தமிழகத்தில் புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக ரூ.16,341 கோடி நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் கே.பழனிசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார். இதில் ரூ.1,431 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தமிழகத்தில் ‘கஜா’ புயல் தாக்கி யதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட் டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. குறிப்பாக டெல்டா மாவட் டங்களில் அதிக அளவில் வீடுகள், மரங்கள், பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேக மாக நடந்து வருகின்றன. பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நிவாரணப் பணி களுக்காக தமிழக அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரை சந் தித்து மத்திய அரசின் நிவாரண நிதியைக் கோருவதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் சென்றனர். டெல்லியில், முதல்வரை அதிமுக எம்.பி.க்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது ‘கஜா’ புயலால் ஏற்பட் டுள்ள பாதிப்புகளை பிரதமரிடம் விளக்கினார். தேவையான நிவா ரண நிதி தொடர்பான மனுவையும் அளித்தார். அதில், புயல் சேத விவரங்கள், அவற்றை விளக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றிருந் தன. இந்த சந்திப்பின்போது, அமைச் சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர் உடன் இருந் தனர்.
பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி அளித்த மனுவில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிரந்தர சீரமைப்பு மற்றும் பேரிடர் மீட்புக்காக ரூ.14,910 கோடி, தற்கா லிக புனரமைப்புக்காக உடனடியாக ரூ.1,431 கோடி என மொத்தம் ரூ.16,341 கோடி வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு முதல் வர் பழனிசாமி அளித்த பேட்டி:
தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பல்வேறு மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான நிதியை பெற பிரத மரை சந்தித்தேன். புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை அவருக்கு விளக்கி, விவரங்கள் அடங்கிய மனுவை அளித்துள்ளேன். தற் காலிக சீரமைப்புக்காக உடனடி யாக ரூ.1,431 கோடி வழங்க வேண்டும். நிரந்தர சீரமைப்புக்காக ரூ.14,910 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுள் ளேன். புயல் சேதங்களை மத்திய குழுவினர் உடனடியாக பார்வை யிட்டு, நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
தங்களது கோரிக்கைக்கு பிர தமர் என்ன பதில் தெரிவித்தார்?
சேதமடைந்த பகுதிகளை பார்வையிட உடனடியாக மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமரை அழைத் தீர்களா?
பிரதமரும் வருமாறு கேட்டுக் கொண்டேன். இருப்பினும் முதலில் மத்திய குழுவை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
பாதிப்பு குறைந்தது
வழக்கமாக மாநிலங்களில் பேரிடர் ஏற்படும்போது மத்திய அரசே குழுவை அமைக்கும். மத்திய அமைச்சர்களும் வந்து பார்வை யிடுவார்கள். தமிழகத்துக்கு அது போல் யாரும் வரவில்லையே?
எங்களைப் பொறுத்தவரை புயல் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுத்துள்ளோம். 82 ஆயிரம் பேரை முகாமில் தங்கவைத்து பாதுகாத்ததன் விளைவாக புயலின் போது பொதுமக்களின் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டு மின்றி அந்தந்த மாவட்ட அமைச்சர் களை அங்கேயே தங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை வழங்கப் பட்டது. தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்டோருடன் 2 முறை ஆலோசித்து புயல் முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது பற்றி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது. அதன்படி அவர்களும் செயல் பட்டனர். மாவட்ட ஆட்சியர்களுக்கு உதவ மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
பேரிடர்களின்போது மாநில அரசு கோரும் நிதியில் 10 சதவீதம் தான் மத்திய அரசு தரு கிறது. இப்போதாவது பேரிடர் மேலாண்மை நிதியை அதிக அள வில் பெற தமிழக அரசு கோரிக்கை விடுக்குமா?
‘கஜா’ புயல் தாக்கியதுமே அதிகாரிகளை அனுப்பி சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு அதை பிரதமரிடம் அளித்துள்ளோம். தமி ழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து வருகிறது. முதல்கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது.
பிரதமரிடம் நிவாரணப் பணி களுக்காக எவ்வளவு கேட்டுள் ளீர்கள்?
நிரந்தர சீரமைப்புக்காக ரூ.14,910 கோடி கேட்கப்பட்டுள்ளது. தற்காலிக சீரமைப்புக்காக முதல் கட்டமாக ரூ.1,431 கோடி கேட்ட போது, தருவதாக பிரதமர் தெரிவித் துள்ளார். அத்துடன் மத்திய குழுவை யும் அனுப்புவதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவா ரணப் பணிகளை துரிதப்படுத்த துணை முதல்வர் மீண்டும் செல்கிறார். ஏற்கெனவே அங்கு அமைச்சர்கள் முகாமிட்டு பணி களை செய்து வருகின்றனர். ஐஏஎஸ் அதிகாரிகளும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். வரு வாய் துறை அதிகாரிகளும் தேவையான இடங்களுக்கு கூடுத லாக அனுப்பப்பட்டுள்ளனர். நிவா ரணப் பணிகள் துரிதமாக மேற் கொள்ளப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
மத்திய குழு இன்று வருகை
புயல் சேதங்களைப் பார்வையிட, மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகின்றனர். இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி நேற்று மாலை கூறும்போது,‘‘ மத்திய குழுவினர் புயல் பாதிப்புகளை 3 நாட்கள் ஆய்வு செய்கின்றனர். அவர்கள் தமிழகம் வந்த பின்னர் கலந்து பேசி, செல்லும் இடம் குறித்து திட்டமிடப்படும். பாதித்த இடங்களை பார்வையிட்டு, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். கோரிக்கை மனுவுடன் பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை பிரதமரிடம் அளித்தேன். அதை பார்த்து இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மத்திய குழுவை அனுப்ப பிரதமர் முடிவெடுத்துள்ளார். நிச்சயமாக கோரிய தொகை கிடைக்கும். ஆளுநர் மூலம் நிவாரணம் கிடைத்தாலும் மக்களுக்கு நன்மைதான். மக்களுக்கு நிவாரணம் சென்று சேர வேண்டும் என்பதுதான் அரசின் திட்டம்’’ என்றார்.
மத்திய உள்துறை இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தமிழகம் வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார்.