

கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 16-வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாநாட்டையொட்டி கிருஷ்ண கிரியில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. பேசியதாவது: ஹமாஸ் இயக்கத்தை எதிர்த்து போரிடுவதாக கூறி, பாலஸ் தீனியர்களை இஸ் ரேல் ராணுவம் கொன்று வருகிறது.
இஸ்ரேலுக்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அமைப் புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே அரசு போர் குற்றம் புரிந்தது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசு பின்பற்றிய அதே கொள்கைகளையே பாஜக அரசும் பின்பற்றுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் எதிராக பாஜக அரசு செயல்படுகிறது.
இலங்கை அரசின் பாதுகாப் புத்துறை இணைய தளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகக் கட்டுரை வெளியானதற்கு இலங்கை அரசு மன்னிப்பு கேட்டது. ஆனால் இந்தியா குறித்து இலங்கை அரசின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்றார்.
கூட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச்செய லாளர் சந்தோஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.