

பரங்கிமலை கத்திப்பாராவில் நட்சத்திர ஹோட்டலுக்குள் வெடி குண்டு இருப்பதாக கடிதம் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரங்கிமலை கத்திப்பாரா மேம்பாலம் அருகே நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முன் தினம் பதிவு தபாலில் வந்த கடிதத்தில் ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத் தில் எழுதப்பட்டிருந்தது. இதை யடுத்து பரங்கிமலை போலீஸில் ஹோட்டல் நிர்வாகத்தினர் புகாா் செய்தனர்.
போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்பட்டது. ஆனால், எதுவும் சிக்கவில்லை. அந்த கடிதம் வெறும் புரளி என்று தெரியவந்தது. இதன் பின்னரே போலீஸார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதுதொடர்பாக பரங்கிமலை போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். வெடி குண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கடிதத்தில் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தபால் நிலை யத்தில் இருந்து அனுப்பியதும், கடந்த ஒருவாரம் ஹோட்டலில் தங்கியவர்கள் யாரேனும் இந்தச் செயலில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.