

திருவண்ணாமலை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம் கிடாம்பாளையம் காந்தி நகர் பகுதியில் தோண்டப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த துரை என்பவரின் ஒன்றரை வயது குழந்தை சுஜித், உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். குழந்தையின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தை சுஜித்தின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.