

இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் உட் பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் இன்று (வியாழக்கிழமை) காலை விண்ணில் சீறிப்பாய்கிறது.
விண்வெளி ஆய்வுத்துறையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு இணை யாக இந்தியாவும் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளையும், அதிநவீன செயற்கைக் கோள்களையும் தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறது.
அந்த வகையில், இஸ்ரோ உருவாக்கியுள்ள ஹைசிஸ் (Hyper Spectral Imaging Satellite) செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (வியாழக்கிழமை) காலை சரியாக 9.57 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த செயற்கைக்கோளுடன் அமெரிக்கா வின் 23 செயற்கைக்கோள்கள், ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலே சியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய 7 நாடு களின் செயற்கைக்கோள்கள் என 30 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் செலுத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய செயற்கைக்கோள் புவி வட்டப்பாதை யில் 636 கிலோ மீட்டர் தொலைவிலும், மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்கள் 504 கிமீ தொலைவிலும் நிலைநிறுத்தப்படும்.
380 கிலோ எடை கொண்ட ஹைசிஸ் செயற்கைக்கோளானது விவசாயம், வனவளம், புவிப்பரப்பு, கடலோரப் பகுதிகள், உள்நாட்டு நீராதாரங்கள் ஆகியவற்றின் தன்மை குறித்த தகவல்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்து பூமிக்கு அனுப்பும். இதற்காக அந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு இஸ்ரோ செலுத்தவுள்ள 6-வது செயற்கைக் கோள் ஆகும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது. ராக்கெட்டை ஏவுவதில் 4-வது நிலையான எரிபொருள் நிரப்பும் நிலையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.