

சென்னையில் முக்கிய சாலைகளில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள் ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வட சென் னையில் முக்கிய பகுதியான ராஜாஜி சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை, இப்ராகிம் சாலை, எஸ்பிள னேடு சாலை, வால்டாக்ஸ் சாலை, மின்ட் தெரு ஆகிய முக்கிய சாலை களில் 668 கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காணிப்பு கேமராக்கள் வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் ஸ்டேன்லி ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் இயக்கத்தை தொடங்கி வைத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:
‘‘குற்றங்களை முற்றிலும் குறைக்க சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் குறைந்த பட்சம் 50 மீட்டருக்கு ஒரு கண் காணிப்பு கேமரா பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள் ளது. பொதுமக்களும் தங்கள் வீடு களுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி சட்டம் ஒழுங்கு காக்க ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக போக்குவரத்து போலீஸாருக்கு தலைக்கவசம், முகக்கவசம் மற்றும் மழை அங்கி வழங்கினார். நிகழ்ச்சியில் போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணை யர் அருண், இணை ஆணையர் கள் சுதாகர், நஜ்மல் ஹோடா உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.