

புயல் சேத நிவாரணங்களை ஆய்வு செய்ய பாஜக சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்
பின்னர் செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி:
''புயல் பாதித்த பகுதிகளில் உள்ள தென்னைகளை மீண்டும் நட விஞ்ஞான முறைப்படி நடவடிக்கை வேண்டும்.
தமிழக பாஜக சார்பில் மத்திய அரசுக்கு நிவாரண உதவி அளிக்க அறிக்கை அளிக்கப்படும். பாஜக சார்பில் சேதங்களைக் கணக்கிட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். பாதிப்புகள் விமானப் படை மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
பாக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறையை கேட்காததே மக்களின் குறையாக உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.