Published : 19 Nov 2018 09:48 AM
Last Updated : 19 Nov 2018 09:48 AM

மேல்நிலைக் கல்வி பயிலும் 11.17 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பருக்குள் மிதிவண்டி ஜனவரிக்குள் மடிக்கணினி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி 

பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும்11.17 லட்சம் மாணவர் களுக்கு டிசம்பர் இறுதிக்குள் மிதிவண்டியும், ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினியும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழக பவள விழா நினைவு வளைவு திறப்பு விழா நேற்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நினைவு வளைவைத் திறந்து வைத்தார்.

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் பரிசுகளை வழங்கினார். செங்குந்தர் கல்விக்கழக நிறுவனர்களின் படங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இதையடுத்து, பவள விழா மலரை அமைச்சர்கள் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. விழாவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பேசிய தாவது:

அரசுப் பள்ளி மாணவ, மாணவி யருக்கு, தனியார் பள்ளிகளை மிஞ்சுகிற அளவிற்கு சீருடைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை 3000 பள்ளிகளை ஸ்மார்ட் வகுப்பறை களாக மாற்றவும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பறைகளை கணினி மயமாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ரூ.490 கோடி மதிப்பீட்டில், இந்த பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும்.

ஆறாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்களுக்கு, ‘டேப்’ வழங்கப்படும். பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 11.17 லட்சம் மாணவர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் மிதிவண்டியும், ஜனவரி மாத இறுதிக்குள் மடிக்கணினியும் வழங்கப்படும். அரசின் கொள்கைப் படி, 100-க்கும் ேற்பட்ட மாணவர்கள் இருந்தாலே, ஆங்கிலவழிக் கல்விக்கான வகுப்பறை ஒதுக்கீடு செய்ய முடியும்.

இதன் அடிப்படை யில், 300-க்கும் மேற்பட்ட மாணவர் கள் படிக்கும் இப்பள்ளியில் இரு ஆங்கில வகுப்பறைகள் விரைவில் தொடங்கப்படும், என்றார்.

விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென் னரசு, இ.எம்.ஆர். ராஜா, செங்குந்தர் கல்விக்கழக தலைவர் எம்.சண்முகவடிவேல், செயலாளர் எஸ்.சிவானந்தன், பள்ளி தாளாளர் என்.மோகன்ராஜ், நந்தா கல்வி நிருவனங்களின் தலைவர் வி.சண்முகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x