Published : 01 Aug 2014 07:48 PM
Last Updated : 01 Aug 2014 07:48 PM

இந்தியா - அமெரிக்கா இடையே கருத்துகளும் ஆர்வமும் மிகப்பெரிய அளவில் உள்ளது: பிரதமர் கருத்து

பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க செயலர் திரு. ஜான் கேரி மற்றும் வர்த்தக பிரிவு செயலர் பென்னி பிரிட்ஸ்கர் புது தில்லியில் இன்று சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு அமெரிக்க செயலர்களும் இந்திய அமெரிக்க இடையே செயல்படுத்த வேண்டிய உத்தேச திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதற்கு முன் உரிமை அளிக்க அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்தை தெரிவித்தனர். இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, உலக அளவிலான பங்கேற்பு ஆகியவை குறித்தும் இவர்கள் பிரதமருக்கு தெரிவித்தனர். வரும் செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடைபெற உள்ள மாநாட்டில், புதிய உறவை ஏற்படுத்தும் வகையில் புதிய கொள்கைகளை கொண்டு வர வேண்டு. இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று ஒபாமாவின் விருப்பத்தை பிரதமரிடம் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே கருத்துகளும் ஆர்வங்களும் மிகப்பெரிய அளவில் இருப்பதாக பிரதமர், அமெரிக்க செயலர்களிடம் தெரிவித்தார். உலக அளவில், இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து உலக அளவில் உள்ள சவால்களை சந்திக்கவும், அமைதியை மேம்படுத்தவும், இந்தியாவின் பொருளாதார மாற்றங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் இணைந்து செயல்படுவதே இந்தியாவின் தொலை நோக்கு பார்வையாகும்.

வர்த்தகம், முதலீடு, தூய்மையான எரிசக்தி, புதிய கண்டுபிடிப்புகள், கல்வி, தொழில் மேம்பாடு, வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல், இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்ற துறைகளில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் இந்த நல்லுறவு அமைய வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளில், வறுமை குறித்து சவால்களை, வறுமை நாடுகள் புரிந்து கொண்டு பொறுப்பான வகையில் செயல்பட வேண்டும். சர்வதேச அரங்கில், இது முன் வைக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். ஆசிய பசுபிக் மண்டலத்தில், இந்தியாவின் பங்கு; மண்டல பொருளாதார மேம்பாட்டில் தெற்காசியாவின் ஒருங்கிணைந்த முயற்சியில் இந்தியாவின் பங்கு, ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதில் இந்தியாவின் பங்கு, தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேவையான அனுகுமுறை குறித்து பிரதமர் விவாதித்தார்.

இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள அமெரிக்க வெளியுறது செயலர் திரு. ஜான் கேரி, வர்த்தகத் துறை செயலர் திரு. பிரிட்ஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் சிந்தனை மிகுந்த விரிவான கடிதத்தை பாராட்டியும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி. சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத் துறை முதன்மை செயலர் நிர்பேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் மற்றும் மூத்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x