Published : 15 Nov 2018 08:37 AM
Last Updated : 15 Nov 2018 08:37 AM

மதுரையில் திமுக பிரமுகர் பிறந்தநாள் கொண்டாட்டம்: ரவுடிகளை சுற்றி வளைத்த போலீஸ்; காவல் நிலையங்களில் விடிய, விடிய விசாரணை

மதுரை அருகே பரவையில் தனியார் கிளப் ஒன்றில் நடந்த திமுக பிரமுகர் பிறந்தநாள் விழா வில் பங்கேற்ற ரவுடிகளில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் களை 4 காவல் நிலையங்களில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: முன்னாள் மத்திய அமைச் சர் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் சோலை எம்.ரவி. இவர் தற்போது திமுக செயற்குழு உறுப்பினராக உள்ளார். கல்வி நிறுவனம் ஒன்றையும் நடத்துகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் சிறப்பாக கொண்டாடுவர்.

இந்த ஆண்டும் வழக்கம் போல, மதுரை அருகே பரவை யில் உள்ள கிளப் ஒன்றில் அவ ரது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழாவில் கூட்டாளிகள் மற்றும் மாணவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மதுரை மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பிரபல ரவுடிகளும், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களும் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

15-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்

இதைத் தொடர்ந்து ஆயுதம் தாங்கிய 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தனியார் கிளப்புக்கு வெளியே நேற்று முன்தினம் மாலை முதலே தீவிரமாக கண்காணிப் பில் ஈடுபட்டனர்.

அப்போது, விழாவில் பங்கேற்க சென்ற 15-க்கும் மேற்பட்டவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் சுற்றி வளைத்து பிடித்தோம். மற்றவர் கள் தப்பியோடி விட்டனர். சிக்கிய ரவுடிகளின் முகவரிகளின் அடிப்படையில், அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்து அவர் கள் மீதான வழக்குகளின் விவரங் களை சேகரித்து உறுதிப்படுத்த நகர் காவல் துணை ஆணையர் சசிமோகன் அறிவுறுத்தினார்.

அதன்படி 4 முக்கிய ரவுடிகள் ஆகியோர் செல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட் டனர். கரிமேடு காவல் நிலையத்தில் 5 பேர் ஒப்படைக்கப்பட்டனர். எஸ்.எஸ். காலனி, கூடல்புதூர் காவல் நிலையங்களிலும் சிலர் ஒப்படைக்கப்பட்டனர். போலீஸிடம் சிக்கிய நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருப்பது, வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் நபர்களாக இருந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x