Published : 22 Nov 2018 10:47 AM
Last Updated : 22 Nov 2018 10:47 AM

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு: பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்

நாகப்பட்டினம்

கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆளுநர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டத்தில் நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, பூவைத் தேடி, காமேஸ்வரம், விழுந்தமா வடி, புதுப்பள்ளி, வேட்டைக் காரனிருப்பு, தாதன்திருவாசல், கோவில்பத்து, வானவன்மகா தேவி, கள்ளிமேடு, தாமரைப்புலம், செம்போடை வடக்கு, தேத்தாக்குடி தெற்கு ஆகிய பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், மின்மாற் றிகள் ஆகியவற்றை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளப் பள்ளம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வை யிட்டார். தொடர்ந்து, பழங்கள்ளி மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

தோப்புத்துறை, வள்ளியம்மை சாலை, மகாராஜபுரம் (வேதாரண் யம்) காசி விஸ்வநாதர் கோயில், வேதாரண்யம் நகரில் மேலவீதி புனித மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெரிய குத்தகை, புஷ்பவ னம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, கஞ்சமேனித் தெரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி, நாலுவே தபதி ஊராட்சி, தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி சேவை மையம், டி.டி.கே புயல் பாதுகாப்பு இல்லம், கீழையூர் ஒன்றியம் தாதன்திருவாசல் ஆகிய கிராமங்களில் பாதிப்புகளைப் பார்வையிட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெள்ளப்பள்ளம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து, புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த ஆளுநர், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். நாலுவேதபதி மற்றும் மகாராஜபுரம் கிராமங்களில் புயலால் ஏற்பட் டுள்ள பாதிப்புகளை அவர் பார்வை யிட்டார்.

புஷ்பவனம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட் டுள்ள மருத்துவ முகாமைப் பார்வை யிட்டு சிகிச்சைகள் குறித்தும், தொற்று நோய் பரவாமலிருக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதியில் புயலால் முறிந் தும் சாய்ந்தும் உள்ள தென்னை மரங்களைப் பார்வையிட்டு, இழப்புகள் குறித்து விவசாயி களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், கீழையூர் ஊராட்சி ஒன்றி யம் தாதன்திருவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு, பாதிக்கப்பட்ட வீடுகளில் பயன்படுத்தும் வகையிலான தார்ப்பாய்களை வழங்கினார்.

வேதாரண்யம் பகுதியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டபோது, நகராட்சிப் பகுதியில் மக்களுக்கு வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் காரணமாக, சிலிண்டர் பெறுவது தாமதமாகிறது என ஆளுநரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். அவர்களது கோரிக்கையை கேட்ட ஆளுநர், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமாரிடம் உத்தரவிட்டார். இதையடுத்து, கூடுதலாக வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் வழங்குவதற்காக தற்காலிகமாக விநியோக மையம் வேதாரண்யத்தில் உடனடியாக அமைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x