

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தலைமைச் செயலக பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள் ளிட்ட மாவட்டங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் பல தரப்பினரும் நிவாரணப் பொருட்களை அனுப்ப ஆயத்தமாகி வரு கின்றனர்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில், தலைமைச் செயலக பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை புயல் நிவாரணத்துக்காக முதல் வர் நிவாரண நிதிக்கு வழங் குவதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணி சாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கி வரும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கள், அதிகாரிகள் உள்ளிட் டோருக்கு நன்றி தெரிவித் துக் கொள்கிறோம். தமிழ் நாடு தலைமைச் செயலக சங்க பணியாளர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முன்வந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.