Published : 23 Nov 2018 09:21 AM
Last Updated : 23 Nov 2018 09:21 AM

திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேதத்தை பார்வையிடச் சென்றபோது ஆளுநரின் காரை மறிக்க முயற்சி: பாதுகாப்பு வாகனங்கள், அரசு அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் புயல் தாக்கியதில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று வருகை தந்தார். திருவாரூரில் இருந்து மன்னார்குடி வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் சேதங்களை ஆளுநர் பார்வையிட்டார். அவருடன் அமைச் சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அதிகாரி களும் உடன் சென்றனர்.

அப்போது காசாங்குளம் என்ற இடத்தில் புயலில் சிக்கி கீழே விழுந்து கிடந்த, உயரழுத்த மின் கோபுரத்தை கண்டதும் காரை விட்டு இறங்கிய ஆளுநர் அதை பார்வையிட்டார்.

பின்னர், சேரி என்ற கிராமத்தில் தமிழ்ச்செல்வி என்ற பெண்மணி யின் இடிந்த வீட்டை பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அரசின் உதவித் தொகை ரூ.18 ஆயிரத்து 500 உங்களுக்கு கிடைக்கும் என்றார். அதன்பிறகு, கோட்டூரில் உள்ள தெருக்களில் சேதமடைந்த வீடு களை பார்வையிட்டார்.

திருப்பத்தூர் என்ற இடத்தில் விவசாயிகள் சாலையோரம் நின்ற தைப் பார்த்து காரை நிறுத்தி அவர்களிடம் பேசினார். அப்போது அங்கிருந்த தங்கவேலு என்ற விவசாயி, புயல் தாக்கியதில் திருப்பத்தூர் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும், அதிகாரிகள் யாரும் வரவில்லை எனவும் இந்தி மொழியில் ஆளுநரி டம் தெரிவித்தார். அதற்கு நிலைமை சரியாகிவிடும் என இந்தியிலேயே ஆளுநரும் பதில் கூறினார்.

விளக்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு ஆளுநர் சென்றபோது, அமைச்சர்கள் காம ராஜ், செல்லூர் ராஜூ மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர். ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் வருவதைக் கண்ட மக்கள் தங்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், மக்களை ஆளுநர் சமாதானப்படுத்தி, உரிய வசதி களை செய்து கொடுக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் கூடி ஆளுநரின் காரை மறிக்க முற்பட்ட னர். ஆனால், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் சென்ற காரை மறிக்க முடியாத நிலையில், பின்னால் வந்த அதிகாரிகளின் கார்களை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி விரை வில் உரிய வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தென்னை விவசாயிகள் மனு

ஆளுநர் பன்வாரிலாலிடம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன், தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், தென்னை மரங்களை இழந்து வாடும் விவசாயி கள் தங்கள் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஒரு மரத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளு படி செய்ய வேண்டும். அழிந்து போன தென்னை மரங்களை அப்புறப்படுத்தி நிலத்தை பண் படுத்த முதல் கட்ட நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x