Published : 01 Nov 2018 11:30 AM
Last Updated : 01 Nov 2018 11:30 AM

படேல் சிலை தமிழ் மொழிபெயர்ப்பில் பிழை: தமிழறிஞர்கள் வேதனை

குஜராத் மாநிலத்தில் சர்தார் படேல் சிலை அமைந்துள்ள வளாகத்தில் உள்ள பெயர் பலகையில் ‘தி ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ (The Statue of Unity) என்பது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அதில் தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’என தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள் ளது. அதாவது ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று இருக்க வேண் டும்.

இந்த தகவல் படத்துடன் வெளியானதும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் கூறும்போது, “உலகின் மிகப்பெரிய படேல் சிலைக்கு கீழே ‘ஒருமைக்கு ஓர் உன்னத சிலை’ என்ற அழகு தமிழில் எழுதியிருக்கலாம். யாரை கேட்கிறார்கள். வீணாய் ஒரு பழி சுமக்கிறார்கள்” என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், ‘கணையாழி’ இலக்கிய இதழின் ஆசிரியருமான மு.ராசேந்திரனிடம் கேட்டபோது, “Statue Of Unity என்பதை ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என மொழிபெயர்த்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது வேண்டுமென்றே செய்தது அல்ல என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் விளக்கம் ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும், இந்த மொழிபெயர்ப்பை செய்தவர் தவறுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடியும் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட பல்லாயிரம் ஆண்டு தொன்மையான எழுத்து வடிவம் கொண்ட மொழியை இப்படி பிழையாக எழுதியிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x