80 வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் பெருந்துறையில் கைது 

80 வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் பெருந்துறையில் கைது 
Updated on
1 min read

80-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய, வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் பெருந்துறை போலீஸாரிடம் சிக்கினார்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸார் கூறியதாவது: வேலூர் மாவட்டம், காட்பாடி கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். வேலூர், வாலாஜா பாத், திருவண்ணாமலை, திருப் பத்தூர், ராணிப்பேட்டை, நாமக் கல் உள்ளிட்ட காவல் நிலை யங்களில் இவர் மீது 80-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் காஞ்சிபுரம் போலீஸார் மணிகண்டனைக் கைது செய்தபோது, ஒரு கிலோ நகை பறிமுதல் செய்யப்பட் டது. அதன்பிறகு, நவ. 3-ல் ஜாமீனில் வெளிவந்த மணிகண் டன், அதன்பிறகு 6 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கோவை போத்தனூர் உதவி ஆணையர் சோமசுந்தரம் தலைமையில் மணிகண்டனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெருந்துறை சிப்காட் அருகில் மணிகண்டனை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

அவர் வந்த காரை சோதனை யிட்டதில், கொள்ளையின்போது பூட்டை உடைக்க 10-க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகள், 8 செல்போன், தங்க, வைர நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள பூட்டிய வீடுகளை ஐந்து நிமிடத்தில் கொள்ளையடித்து விட்டு தப்பிப்பது மணிகண்டனின் வாடிக்கை எனத் தெரிவித்த போலீஸார், இவர் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் உதவி ஆணையர் சோமசுந்தரத்திடம் மணிகண்டனையும், கார் உள்ளிட்ட கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in