Published : 16 Nov 2018 04:49 PM
Last Updated : 16 Nov 2018 04:49 PM

கஜா புயல்: ரயில்சேவை கடும் பாதிப்பு; பாதியில் நின்றதால் பயணிகள் அவதி

‘கஜா’ புயலினால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே  தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே துறையின் திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள இன்று ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம் வருமாறு:

56115/56116 மயிலாடுதுறை - தஞ்சாவூர் - மயிலாடுதுறை பாசஞ்சர்

56824 - திருச்சி- மயிலாடுதுறை பேசஞ்சர்

56871/56872 - மயிலாடுதுறை- திருவாரூர்- மயிலாடுதுறை பாசஞ்சர்

76807/76808 - திருச்சி- மானாமதுரை- திருச்சி பாசஞ்சர்

76840- காரைக்குடி- திருச்சி பாசஞ்சர்

வழியிலேயே நிறுத்தப்பட்ட ரயில்கள்

மைசூர்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்  (16232)  தஞ்சாவூரிலேயே நிறுத்தப்பட்டது.

எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் (16188) தஞ்சாவூரிலேயே நிறுத்தப்பட்டது.

கோவை - மன்னார்குடி எக்ஸ்பிரஸ் (16616) தஞ்சாவூரிலேயே நிறுத்தப்பட்டது.

மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்

திருச்செந்தூர் சென்னை எழும்பூர் செந்தூர் எக்ஸ்பிரஸ்  (16106) திருச்சி விருதாச்சலம்  விழுப்புரம் வழியாக செல்கிறது

திருச்சி சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (16796/16795)  திருச்சி விருதாச்சலம் விழுப்புரம் வழியாக செல்கிறது.

திருச்சி - காரைக்குடி, விருதுநகர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருவனந்தபுரம் - மும்பை ரயில் கொடை ரோடு ரயில்நிலையத்தில் 2 மணிநேரம் தாமதமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இவ்வாறு திருச்சி ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

‘கஜா’ புயலின் தாக்கத்தின்ல் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டும், பாதியில் நிறுத்தப்பட்டும் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்ட நிலையில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x