

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய் திருந்த மனுவில், ‘‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத னால் ஜெயலலிதாவுக்கு சொந்த மான சொத்துகள் பறிமுதல் செய் யப்பட்டு அபராதத் தொகையை செலுத்த வேண்டும். இந்த சொத்துக்கள் பட்டியலில் வேதா நிலையமும் உள்ளது.
குழப்பம் நீடிப்பு
எனவே ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற முடியாது. ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதிலும் குழப்பம் நீடித்து வருகிறது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சீல் வைத்த 2 அறைகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே வேதா நிலையத்தை அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றுவது என்பது சட்டத்துக்கு புறம்பானது.
தண்டணை பெற்றவர்
மேலும் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவு இல்லம் அமைப்பது என்பதும் ஏற்புடையதல்ல. எனவே இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சீல் வைத்த 2 அறைகள் இன்னும் திறக்கப்படவில்லை. எனவே, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றுவது சட்டத்துக்கு புறம்பானது.