

அங்கீகாரமற்ற மனைகளை வாங்கி யவர்கள், நேரடியாக அபராத கட்டணத்துடன் விண்ணப்பித்து, அங்கீகாரம் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைய டுத்து, அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் மனைகள் வாங்கியோ ரின் நலன்களை காக்கும் நோக்கி லும், அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளுக்கு அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை அளிக்கவும், அவற்றை வரன்முறைப்படுத்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் படி, 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னர் உருவாக் கப்பட்ட மனைப்பிரிவுகள் அங்கீகா ரம் பெற, விண்ணப்பிக்கலாம் என கடந்த ஆண்டு மே 4-ம் தேதி வீட்டு வசதித் துறை அரசாணை வெளி யிட்டது. அத்துடன் விதிகளும் வெளியிடப்பட்டன. இதன்படி மனைப்பிரிவுகளை வரன்முறைப் படுத்த விண்ணப்பிக்க கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அந்த காலக்கெடு நீட்டிக் கப்பட்டு, கடந்த நவம்பர் 3-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதற்கிடையில், அங்கீகார மற்ற மனைப்பிரிவுகள் வரன் முறைப்படுத்துதல் தொடர்பான கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இக்கூட்டத்தில், அங்கீகாரமற்ற மனைகளை வாங்கியவர்கள் வழக் கமாக அங்கீகாரம் பெறும் முறை யில் விண்ணப்பித்து, அபராத கட்ட ணம் செலுத்தினால் அங்கீகாரம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இதுவரை அங்கீகாரம் பெறாத மனைகளின் உரிமையாளர் கள் சம்பந்தப்பட்ட நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம்(டிடிசிபி), சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஆகியவற் றுக்கு அடுத்த 3 மாதத்துக்குள் விண் ணப்பத்தை அனுப்பி அங்கீகாரம் பெறலாம்.
இதற்கு ஒரு மனைக்கு ரூ.500-ஐ செலுத்த வேண்டும். இதுதவிர, மாநகராட்சி பகுதிக்கு ஒரு சதுர மீட்டருக்கு ரூ.500, பேரூராட்சி- ரூ.75, முதல் மற்றும் 2-ம் நிலை நகராட்சி - ரூ.150, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி- ரூ.250, கிராம ஊராட்சி- ரூ.25 என வளர்ச்சி கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர, வரன்முறைப்படுத்தும் கட்டணமாக மாநகராட்சியில் ஒரு சதுரமீட்டருக்கு ரூ.100, பேரூராட்சி- ரூ.30, முதல் மற்றும் 2-ம் நிலை நகராட்சி - ரூ.60, சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சி- ரூ.60, கிராம ஊராட்சி- ரூ.30 செலுத்த வேண்டும்.
அகில இந்திய கட்டுனர் சங்கத் தின் தென்னக மைய துணைத் தலைவர் எஸ்.ராமபிரபு கூறும் போது, “இதுவரை தங்கள் மனை களுக்கு அங்கீகாரம் பெறாதவர் கள், விண்ணப்பத்துடன் வரன் முறைக்கட்டணம் மற்றும் அதில் குறிப்பிட்ட சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி மனைகளுக்கு அங்கீகாரம் பெற முடியும். இதன் படி, நவ.3-ம் தேதிக்குப்பின் 6 மாதத்துக்குள் விண்ணப்பிப்பவர் கள் வரன்முறை கட்டணத்தில் 10 சத வீதமும், ஓராண்டுக்குள் விண்ணப் பிப்பவர்கள் 25 சதவீதமும், அதற்கு மேல் 50 சதவீதமும் அபராத கட்டணமாக செலுத்த வேண்டும்” என்றார்.
பதிவுத்துறைக்கு அறிவுறுத்தல்
அங்கீகாரமற்ற மனைப்பிரிவு தொடர்பான வழக்கே, இந்த திட்டத்துக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. எனவே, பதிவுத்துறைக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த விஷயத்தில், ஏற்கெனவே உள்ள அறிவுறுத்தல்கள் படி, சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி ஆகியவற்றால் வரன்முறைப்படுத்தப்பட்டதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலோ, உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் உத்தரவு அளிக்கப்பட்டால் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து சார்பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கூட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.