

சென்னை
தென் தமிழக மக்களுக்கு குறைந்த செலவில் நேர்த்தியான மருத்துவத்தை அளித்து வரும் வேலம்மாள் மருத்துவமனையில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 'புற்றுநோய் உதவிக்குழு' நாளை தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து இம்மருத்துவ மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புற்றுநோயாளிகள், புற்று நோய்க்கான சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள், சிகிச்சை மூலம் முற்றிலும் குணமானவர்கள் மற்றும் இந்நோய் குறித்து அறிந்துகொள்ள விரும்புபவர் களை இணைத்து இந்த உதவிக்குழு அமைக்கப்படுகிறது.
இக்குழுவின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருபவர்களுக்கு மனநல ரீதியாக ஆலோசனை களை வழங்கி, சந்தேகங்களை களைந்து தக்க ஆலோசனை வழங்கப்படும். இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த, பல்வேறு நவீன சிகிச்சை முறைகள் பற்றி விளக்கப்படும்.
புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சட்ட உதவி மற்றும் நிதி உதவி கிடைக்கக் கூடிய சேவைகள் பற்றி தகவல் வழங்கப்படும். நோய் முற்றிலும் குணமடைந்தவர்கள் கடந்து வந்த சோதனை, அனுபவங்களை பகிர்ந்து தெளிவு ஏற்படுத்தப்படும்.
வேலம்மாள் மருத்துவ மனையின் புற்றுநோய் உதவிக் குழு தொடக்க விழா நாளை (நவ.27) காலை 10 மணிக்கு இம்மருத்துவமனையில் உள்ள ஐடா ஸ்கட்டர் ஹாலில் நடை பெறவுள்ளது. திரைப்பட நடிகை கவுதமி தடிமலா இதனைத் தொடங்கிவைத்து உரையாற்று கிறார். பொது மக்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.