திராவிட கொள்கை தோல்வி அடைந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ் கருத்து

திராவிட கொள்கை தோல்வி அடைந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ் கருத்து
Updated on
1 min read

திராவிட கொள்கை தோல்வி அடைந்து விட்டது என்று ஐ.டி. ஊழியர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தின் நீடித்த வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி பல்லாவரத்தில் நேற்று நடை பெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங் கேற்று ஐ.டி.ஊழியர்களுடன் கலந்து ரையாடினார். அப்போது ஐடி ஊழியர் களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

திராவிட கொள்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அது தோல்வி அடைந்துவிட்டது. திராவிட கொள்கை என்பது அடுத்த தேர்தலில் ஜெயிப்பது மட்டுமாகத்தான் உள்ளது. நாங்கள் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக் கிறோம். திராவிட ஆட்சியைப் பொறுத் தவரை அண்ணா இருக்கும் வரை நன்றாகத்தான் இருந்தது. அதன் பிறகு கருணாநிதி வந்தார். அப்போது விஞ் ஞான ஊழல் என்ற வார்த்தையை திமுக கண்டுபிடித்தது.

கருணாநிதிக்கு பிறகு எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், இபிஎஸ் என ஊழல் தொடர்கி றது. சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் திராவிட கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ளது. ரயில்வே, தபால்துறை, துறைமுகம் என மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீ தம் வட இந்தியர்களை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு சேர்க்கிறார்கள் திட்ட மிட்டு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நான் முதலமைச்சராக இருந்திருந் தால் கஜா புயல் பாதித்த இடங்களி லேயே இருந்திருப்பேன். கேரள வெள் ளத்தில் பினராயி விஜயன் பாதிப்பு பகுதியிலேயே இருந்தார். மத்திய அரசு நிதி கொடுத்தால்தான் நிவாரணம் என்றால் எதற்கு மாநில அரசு. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in