மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்கள்தான் சட்டப்படியான வாரிசுகள்: ஜெ.தீபா, ஜெ.தீபக் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்
ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்கள்தான் சட்டப்படியான வாரிசு என ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த ஜெ.பேரவை மாவட்டச் செயலாள ரான புகழேந்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தி ருந்த மனுவில், ‘‘மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014 செப்.27 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
அப்போது ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.55 கோடியே 2 லட்சத்து 48 ஆயிரத்து 215 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் மற்றும் வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என ஜெயலலிதாவின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.913 கோடிக்கு மேல் உள்ளது. இந்த சொத்துக்கள் தொடர்பாக அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை.
அதனால் இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க நீதிமன்றமே ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரையும் எதிர்மனுதாரராக சேர்த்து அவர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் தரப் பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, “ஜெ.தீபா, ஜே.தீபக் - இவர்களின் அத்தையும், முன்னாள் முதல்வரு மான ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலின் போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து களுக்கும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது சொத்துகளுக்கும் இவர் கள் இருவரும்தான் சட்டப்படியான வாரிசுகள். மேலும் இந்த வழக்கைத் தொடர மனுதாரருக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
