

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
“தற்போது வெப்பச்சல னமோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ இல்லாததால் தமிழகம், புதுச்சேரியில் இன்று (நவ.28) வறண்ட வானி லையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன் ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைப்பொழிவு எதுவும் இல்லை. புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து 30-ம் தேதி தெரியவரும்” என்றார்.