Published : 08 Nov 2018 09:21 AM
Last Updated : 08 Nov 2018 09:21 AM

தமிழகத்தில் இருந்து ராமாயண யாத்திரை; அஜந்தா, கோவா, மூகாம்பிகை, எல்லோரா செல்ல ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து ராமாயண யாத்திரை, அஜந்தா, எல்லோரா, கோவா, மூகாம்பிகை மற்றும் கர்நாடக ஆலயங்களைத் தரிசிக் கும் வகையிலான சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி யின் தென்மண்டல கூடுதல் பொது மேலாளர் எல்.ரவிக்குமார் கூறியதாவது:

இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) மூலம் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். ரயில் மட்டுமல்லாது, விமானம் மூலமாக வும் சென்னையிலிருந்து பல்வேறு சுற்றுலாத் திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறோம். தென்மண்ட லத்தில் இருந்து இதுவரை 330-க் கும் மேற்பட்ட சுற்றுலாக்களை நடத்தியுள்ளோம். இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பய ணம் செய்துள்ளனர். இதற்கி டையே, வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்வேறு சுற்றுலாக்களை நடத்தவுள்ளோம்.

ராமாயண சரித்திரம் நிகழ்ந்த இடங்களுக்கே நேரில் சென்று பார்க்கும் வகையில் ராமாயண யாத்திரைக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் வரும் 14-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈராடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக ஹம்பி, நாசிக், சித்திரைக்கூடம், அயோத்தியா நந்திகிராமம் வழி யாக நேபாளத்தில் உள்ள சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக் புரிக்கும் சென்று ராமேஸ்வரம் வழியாக மீண்டும் மதுரையை முடிவடைகிறது. மொத்தம் 15 நாட்கள் கொண்ட இந்த யாத்திரை செல்ல ஒருவருக்கு கட்டணம் ரூ.15,830 ஆகும்.

இதேபோல், மதுரையில் இருந்து வரும் டிசம்பர் 2-ம் தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரயில் ஹைதராபாத், அஜந்தா, எல் லோரா, மும்பை மற்றும் கோவா வுக்கு இயக்கப்படும். 10 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.10,100 கட்டணமா கும். மதுரையில் இருந்து வரும் டிசம்பர் 14-ம் தேதி புறப்படும் சுற்றுலா சிறப்பு ரயில் விழுப்புரம், எழும்பூர், சேலம், ஈரோடு, கோவை வழியாக கோவாவுக்கு செல்கிறது. 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.4,725 கட்டணமாகும்.

இதேநாளில் புறப்படும் மற் றொரு சுற்றுலா ரயில் எழும்பூர் வழியாக கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி சாரதா பீடம், தர்மசாலா மஞ்சுநாதர் மற்றும் குக்கே சுப்பிர மணியா உள்ளிட்ட ஆலயங்களைத் தரிசனம் செய்யலாம். 5 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.6,930 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற் கண்ட சுற்றுலா கட்டணத்தில் ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும். இது தொடர்பாக மேலும் தகவல்களைப் பெற 9003140680, 9003140681 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, ஐஆர் சிடிசியின் தென்மண்டல துணை மேலாளர் பிரபாகர் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x