புதுச்சேரி வரலாறை விரைவில் எழுத உள்ளேன்: நல்லகண்ணுவிடம் தெரிவித்த பிரபஞ்சன்

புதுச்சேரி வரலாறை விரைவில் எழுத உள்ளேன்: நல்லகண்ணுவிடம் தெரிவித்த பிரபஞ்சன்
Updated on
1 min read

புதுச்சேரி வரலாறு குறித்து முழுமையாக எழுதி முடிக்க ஆசை. விரைவில் எழுதுவேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிடம் எழுத்தாளர் பிரபஞ்சன் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு புதுச்சேரி வந்திருந்தார்.  உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை ‌பெற்று வரும் எழுத்தாளர் பிரபஞ்சனை இன்று நேரில் சந்தித்து அவர் நலம் விசாரித்தார்.

அவருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன் கலை இலக்கிய ப் பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார் முன்னாள் தலைவர் வீர.முருகையன் ஆகியோர் சென்றிந்தனர்.  சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன், இவர்களுடன் இயல்பாக உரையாடினார்.

அப்போது நல்லகண்ணு, "எழுத்தாளர்கள் சமூகத்துக்கு முக்கியம். உடல் நலனை நீங்கள் பார்த்துக் கொள்வது அவசியம்" என்று குறிப்பிட்டு எழுத்துகள் தொடர்பாகவும் பேசினார். அதற்கு எழுத்தாளர் பிரபஞ்சன். "தொடர்ந்து எழுதுவேன். எனக்கு எழுத்தில் கடமையுள்ளது. புதுச்சேரி வரலாற்றை முழுமையாக எழுதி முடிக்க ஆசையுள்ளது. விரைவில் எழுதுவேன்" என்று உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in