

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2011-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கை விசா ரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த ஆணையத்தின் ஆவணங் களை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி இதுதொடர்பான ஆவணங்களை லஞ்சஒழிப்புத் துறை விசார ணைக்கு மாற்றி தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த் தும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்நிலையில் நேற்று நீதிபதி கள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணி யம் பிரசாத் ஆகியோர் அடங் கிய அமர்வில், இந்த தடையை நீ்ட்டிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கோரிக்கை விடுத்தார். அதை யடுத்து இந்த தடையை நீட்டித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசார ணையை வரும் நவ.28-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.