

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை துணை வேந்தராக நியமிக்கப்படு பவரின் தகுதி, அனுபவம் குறித்து புதிதாக வரையறை செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருப்பவர் டாக்டர் சே.கீதாலட்சுமி. இவர் டிசம்பர் 28-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். புதிய துணை வேந்தரை தேர்வு செய்வதற் கான தேர்வுக் குழு கடந்த செப்டம்பரில் அமைக்கப்பட் டது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பணியில் அக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, துணை வேந்தர் நியமனத்தில் தமிழக அரசு சில மாற்றங்களை செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ள தாவது:
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப் படுபவர் மருத்துவக் கல்வியில் பட்ட மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது 20 ஆண்டுகள் மருத்துவராக தொழில் செய்திருக்க வேண் டும். 10 ஆண்டுகள் பேராசிரி யராக பணியாற்றி இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 5 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி டீன், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குநர் போன்ற நிர்வாகத் துறையில் 6 ஆண்டுகளாவது பணியாற்றி இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியதோடு, குறைந்தபட்சம் 5 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.