Published : 18 Nov 2018 10:31 AM
Last Updated : 18 Nov 2018 10:31 AM

கஜா புயலால் வாடிப்பட்டி, சோழவந்தானில் நெல், வாழை சேதம்- பல லட்சம் ரூபாய் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சோழ வந்தான் உள்ளிட்ட பகுதி களில் கஜா புயலால் நெல், வாழை பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்துள்ளன.

மதுரை மாவட்டம் சோழ வந்தான், ரிஷபம், ராயபுரம், நெடுங்குளம், திருவேடகம், தேனூர், மேலக்கால், ஊத்துக்குழி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் உட்பட பல கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல், வாழை பயிரிட்டிருந்தனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன.

இந்நிலையில், நேற்று முன் தினம் கஜா புயலால் இப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ரிஷபத்தில் விவசாயிகள் ராமநாதன், போஸ், தங்கவேல், செந்தில், பழனியப்பன், ராஜேந் திரன், கிட்டு, சுதாகரன், சிவசாமி, வெள்ளைசாமி, மீனாட்சி யம்மாள், ராயபுரத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் சுமார் 100-க்கும் மேற் பட்பட ஏக்கரில் வாழை விவசாயம் செய்திருந்தனர். இதில் சுமார் 9 ஆயிரம் வாழை மரங்கள் பலன் தரும் தருவாயில் இருந்த நிலையில் புயலுக்கு பலத்த சேதமடைந்தது. இதே போல் சுமார் 25 எக்கர் நெல், மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் சோழவந்தான், ஊத்துக்குழி, தென்கரை, முள்ளிப் பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் உட்பட பல பகுதிகளில் அதிக அளவில் பயிர்கள் சேதமடைந் துள்ளன.குட்லாடம்பட்டியில் சிவகுமார் என்பவரின் தோட்டத்தில் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழையில் 250 மரங்கள் ஒடிந்து விழுந் தன. போடிநாயக்கன்பட்டி மேட்டு நீரேத்தான், வடுகபட்டி, கட்டக்குளம் பகுதிகளில் அறுவடைக்கு தயா ராக இருந்த சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ் கின. வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் பயிர் சேதம் தொடர்பாக கணக்கெடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x