

தூத்துக்குடியில் நடந்த துப்பாக் கிச் சூடு சம்பவம் குறித்து, இது வரை 87 சாட்சிகளிடம் விசா ரணை நடத்தப்பட்டுள்ளதாக ஒரு நபர் ஆணைய விசாரணை அதிகாரி யான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக் கிச் சூடு, தடியடி மற்றும் தொடர் சம்பவங்களில் 13 பேர் இறந்தனர். இதுதொடர்பாக, விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை மையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. கடந்த ஜூன் 4-ம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வருகிறது. 5-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் கடந்த 22-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. துப்பாக்கிச் சூட் டில் காயம் அடைந்த பாதிரியார் ஜெயசீலன் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று செய்தியாளர் களிடம் கூறியதாவது: ஒரு நபர் ஆணையத்தில் இதுவரை 87 சாட்சி கள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். 209 ஆவணங்கள் குறியீடு செய்யப் பட்டுள்ளன. 6-ம் கட்ட விசாரணை டிசம்பர் 3-வது வாரத்தில் நடக்க உள்ளது. அப்போது, போராட்டத் தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அமைப்பினரிடம் விசா ரணை நடத்த உள்ளோம். அவர் களில், 140 பேர் அடை யாளம் காணப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது.
அதுதவிர, போலீஸ் தரப்பில் 440 பிரமாண பத்திரங்கள், ஸ்டெர் லைட் ஆலை தரப்பில் அவர்க ளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து 100 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், காயம் அடைந் தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகளை விசாரிக்க இருக்கிறோம் என்றார் அவர்.
காயமடைந்தவருக்கு நிவாரணம்
முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தூத்துக்குடி எழில் நகரைச் சேர்ந்த மனோகரன் என்ப வருக்கு, அரசு தரப்பில் நிவார ணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை, நீதிபதி அருணா ஜெகதீசன் வழங்கினார்.