Published : 30 Nov 2018 09:22 AM
Last Updated : 30 Nov 2018 09:22 AM

முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தமிழகத்தில் தொடக்கம்: 26 வகையான பணியிடங்களை உருவாக்க ஒப்புதல்

முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்கான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை தமிழகத்தில் உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை (மையச் சட்டம் 1/2014) இயற்றியுள்ளது. அதன் பிரிவு 63-ன்படி ஒவ்வொரு மாநிலமும் 'லோக் ஆயுக்தா' என்ற அமைப்பை நிறுவ வேண்டும். அதன்படி தமிழகத்தில் பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப் பதற்காக தமிழக அரசு ‘தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் - 2018’ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டத்தின்படி, தற்போது லோக் ஆயுக்தாவை அமைப்பதற் கான அடிப்படை பணிகள் தொடங் கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நேற்று பணியாளர் மற்றும் நிர் வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்ட உத் தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.

26 பணியிடங்கள்

இதில், லோக் ஆயுக்தா அமைப் புக்கு செயலாளர் நிலையில் இருந்து 26 பணியிடங்கள் உருவாக்குவதற் கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேடுதல் குழுவால் தேர்வு செய்யப் படுவார்கள். இந்தத் தேடுதல் குழுவானது, தேர்வுக் குழுவால் (செலக்சன் கமிட்டி) உருவாக்கப் படும். அதில் ஒருவர் ஆளுநர் ஒப் புதலுடன் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார். தேடுதல் குழு வானது அமைக்கப்பட்ட 2 மாதங் களுக்குள் அளிக்கப்பட்ட பணியை முடிக்கும். தேவைப்பட்டால் கால அளவு நீட்டிக்கப்படும்.

லோக் ஆயுக்தாவில் பணிபுரி வோர் மீதான புகார்கள், லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டிக்கப்பட முடியாததாக இருந்தாலும், வேறு விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்க விரும்புபவர், தன் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங் களுடன் புகார் அளிக்கலாம்.

அதேநேரம், யார் மீது புகார் தெரிவிக்கிறாரோ அவரின் பெயர், பதவி, முகவரி ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். புகார்களை லோக் ஆயுக்தா அமைப்பின் பதிவாளர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபரிடம் அளிக் கலாம். அல்லது தபாலிலும் அனுப்பலாம்.

பதிவாளர் கிடைக்கப்பெற்ற புகார்களை பதிவு செய்வார். புகார்தாரர் அளித்த மனுவில், சட்டப் படி உறுதிப்படுத்த முடியாத விவரங்கள் இருந்தால், அவற்றை நிரூபிக்கவும், தேவையான ஆவ ணங்களை அளிக்கவும் 15 நாட் கள் அவகாசம் அளிக்கப்படும். அளிக்கப்பட்ட அவகாசத்தில், உரிய சான்றாவணங்கள் அளிக்கப்படா விட்டால், புகார்களை நிராகரிக்க பதிவாளருக்கு அனுமதியுள்ளது.

இதுதவிர, புகார் நல்ல நோக்கத்தில் இல்லாமல் இருந் தால், போதிய ஆதாரங்கள் இல்லா மல், ஏற்கெனவே லோக்ஆயுக்தா வின் தலைவர் மற்றும் உறுப்பினர் களால் தள்ளுபடி செய்யப்பட்ட புகார்களை நிராகரிக்கலாம்.

ரகசிய விசாரணை

புகார்கள் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை, ரகசியமாக நடத்தப்பட வேண்டும். பொது வெளியில் அதாவது, பொதுமக்கள் அல்லது பத்திரிகையாளர்கள் அறி யும்படி நடத்தப்படக் கூடாது.

மேலும், விசாரணை நடக்கும் போது போதிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலோ அல்லது புகார் அளிப்போர் நிவாரணம் பெற வேறு வகையான வழிகள் இருந் தாலோ விசாரணையை இடை யிலேயே நிறுத்தலாம். லோக் ஆயுக்தா தலைவர் அல்லது உறுப் பினர்கள் இது தொடர்பாக முடிவெடுக்கலாம்.

இந்த விதிகளுடன், லோக் ஆயுக் தாவின் செயலர் முதல் காவலர் வரையிலான 26 பணியிடங்களை உருவாக்கவும், அவர்களுக்கான தகுதிகள், ஊதியம் ஆகியவையும் விவரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x