

ராமேசுவரத்தில் கடந்த 10 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு விடிய விடிய பெய்த 22 செமீ மழை யால் தாழ்வான குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் சிரமத்துக்கு ஆளாயினர்.
குமரிக் கடல் முதல் தமிழகத்தின் உள்பகுதி வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுவையில் மித மான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித் திருந்தது. இந்நிலையில், வெள்ளிக் கிழமை இரவு முதல் சனிக் கிழமை அதிகாலை வரையிலும் ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன், மண்ட பம், மரைக்காயர் பட்டினம், வேதாளை பகுதியில் கனமழை பெய்தது. கடந்த 10 ஆண்டுக ளில் இல்லாத அளவாக ராமேசுவரத் தில் அதிகபட்சமாக 22.6 செமீ, பாம்பனில் 15.2 செமீ, தங்கச்சி மடத்தில் 15 செமீ மழை பதிவா னது.
கனமழையால் ராமேசுவரத்தில் உள்ள மீனவர் குடியிருப்புகளான ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், மாந்தோப்பு, அம்பேத்கர் நகர், இந்திரா நகர் பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் திரண்டு 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், இரவு முழுவதும் தூங்கவில்லை. அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தையும் தண்ணீர் சூழ்ந்தது.
பாம்பன் சின்னப்பாலம், தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. மேலும், ராமநாதசுவாமி கோயிலுக் குள்ளும் மழைநீர் புகுந்தது. இதையடுத்து கோயிலில் தேங்கிய நீரை மோட்டார் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர். மழைநீர் தேங்கிய பகுதிகளில் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஊழியர்கள், தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.