புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Published on

நாளை (சனிக்கிழமை) நடைபெற இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வானது கஜா புயல் மற்றும் கனமழை பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளரும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலருமான (பொறுப்பு) கே.நந்த குமார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு நவம்பர் 24-ம் தேதி (சனிக்கிழமை) காலை மற்றும் பிற்பகல் நடைபெறுவதாக இருந்த புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வை கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தொடர் மழை கார ணமாக விண்ணப்பித்துள்ள தேர்வர் களின் நிலையை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் ஒத்தி வைக்க தேர்வாணையம் முடிவு செய் துள்ளது. இத்தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும், கூட்டுறவு சங்கங்களுக் கான இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவம்பர் 21-ம் தேதி யிலிருந்து 28-ம் தேதி வரையும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நந்தகுமார் தெரிவித் துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in