Published : 09 Nov 2018 02:24 PM
Last Updated : 09 Nov 2018 02:24 PM

தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்குப் பதிவு; அனுமதியின்றி பேனர், போஸ்டர் ஒட்டியதாகப் புகார்

அனுமதியின்றி பேனர் வைத்தது, போஸ்டர் ஒட்டியது தொடர்பாக தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதல் 'சர்கார்' படக்குழு பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் 'சர்கார்' படம் வெளியானது. அதில் தமிழக அரசின் இலவசத் திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருந்தது. அதில் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்தும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. வில்லி கேரக்டருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயரைச் சூட்டியிருந்தனர்.

இது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தியேட்டர்கள் முன் அதிமுகவினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் படக்குழு இறங்கி வந்தது. காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மீது தமிழகம் முழுவதும் அனுமதியின்றி பேனர் வைத்ததாகவும், போஸ்டர் ஒட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் 4 வழக்குகள், கரூரில் 10 வழக்குகள், நாகையில் 20 வழக்குகள், திருவாரூரில் 21 வழக்குகள், தஞ்சையில் 25 வழக்குகள், திருப்பூரில் 10 வழக்குகள், திருச்சியில் 4 வழக்குகள், அரியலூர் ஜெயங்கொண்டத்தில் 2 வழக்குகள் என விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x