Published : 23 Nov 2018 09:32 AM
Last Updated : 23 Nov 2018 09:32 AM

பத்திரிகைகள் குரல் நசுக்கப்பட்டால் இந்தியா சர்வாதிகார நாடாகிவிடும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை 

ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகையின் குரல் நசுக் கப்பட்டால் இந்தியா சர்வாதிகார நாடாகிவிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சசிகலா தூண்டுதலின் பேரில், அமைச்சர் பதவியில் இருந்து செங்கோட்டையனை முதல்வர் ஜெயலலிதா நீக்கியதாக கடந்த 2012 ஆகஸ்ட் 8-ம் தேதி வெளி வந்த ‘இந்தியா டுடே’ இதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து, இந்தியா டுடே மீது ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இந்தியா டுடே சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவதூறு வழக்கு ரத்து

இந்த வழக்கை நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்ப தாவது: இந்தியா டுடே இதழ் மீது முன்னாள் முதல்வர் ஜெய லலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இந்திய ஜனநாயகத்தின் 4 தூண்களில் பத்திரிகையும் ஒன்று. பத்திரிகை சுதந்திரம் தடுக்கப் பட்டால் நாட்டில் ஜன நாயகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்படும். பத்திரிகையின் குரல் நசுக்கப் பட்டால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும். நாட்டுக்காக தங்களை அர்ப் பணித்தவர்களின் உழைப்பும் வீணாகிவிடும்.

பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு, தவறுகளை பத்திரிகைகள் சுட்டிக்காட்டினால் காழ்ப்புணர்ச்சி அடையக் கூடாது.

இதுபோன்ற விஷயங்களுக் காக அவதூறு வழக்கு தொடரப் படுவதை தடுக்காவிட்டால், இந்த நீதிமன்றம் நிச்சயமாக அரசியலமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டதாகிவிடும்.

பத்திரிகைகளுக்கு கடமை

சமூகத்தில் அன்றாடம் நடக்கும் அரசியல் நிகழ்வுகள், மக் களுக்கு பயன்தரும் நிகழ்வு களை வெளிக்கொணர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை பத்திரிகைகளுக்கு உள்ளது.

இவ்வாறு தனது உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x