Published : 26 Nov 2018 09:23 AM
Last Updated : 26 Nov 2018 09:23 AM

ஆமை வேகத்தில் நடக்கும் பல்லாவரம் மேம்பால பணிகள்: போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் பொதுமக்கள் 

பல்லாவரம் பகுதியில் அமைக்கப் பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலை யில் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தாம்பரத்தில் இருந்து பல்லாவரம் வழியாக குன்றத் தூர் சாலைக்கு செல்லும் வாக னங்களாலும், விமான நிலையத்தில் இருந்து குன்றத்தூர் சாலைக்கு செல்லும் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் புதிய மேம்பாலம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

3 ஆண்டுகள் தாமதம்

இதைத்தொடர்ந்து பல்லாவரத் தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடி செலவில் 1,038 மீட்டர் தூரத்துக்கு புதிய மேம்பாலம் கட்ட முடிவு செய்து தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டில் அறிவித்தது. நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை யால் புதிய மேம்பாலம் கட்டும் பணிகளைத் தொடங்குவதற்கே 3 ஆண்டுகள் ஆகிவிட்டன.

கடந்த 2016-ம் ஆண்டில் இந்த மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன. ஆனாலும், பணிகள் வேகமாக நடக்காமல் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இதனால், ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ‘‘மேம்பாலப் பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. தினமும் 10 பேர்தான் இதற்கான பணிகளில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில் எந்த பணியும் நடைபெறுவதில்லை.

காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக வாகனங்கள் செல்லும்போது, மண், தூசி காற்றில் பறந்து புகைமண்டலம் போல் காட்சி அளிக்கிறது. இந்த இடத்தை கடந்து செல்ல 15 முதல் 20 நிமிடங்கள் ஆகிவிடுகிறது. இதனால், இந்த பகுதியில் மட்டுமின்றி, ஜிஎஸ்டி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பாலம் கட்டும் பணியை வேகமாக முடிக்க வேண்டும்” என்றனர்.

ஜூன் மாததுக்குள்..

இது தொடர்பாக நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பல்லாவரத்தில் ஜிஎஸ்டி சாலை, சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்புகளை இணைத்து ரூ.82 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

தற்போது, இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x